திரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திரி1திரி2திரி3திரி4திரி5

திரி1

வினைச்சொல்திரிய, திரிந்து, திரிக்க, திரித்து

 • 1

  (விலங்குகள்) இங்கும் அங்கும் போய்வருதல்/(மனிதர்கள்) (குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல்) பல இடங்களுக்குப் போய்வருதல்; அலைதல்.

  ‘உயிரியல் பூங்காவில் சிங்கங்களும் புலிகளும் சுதந்திரமாகத் திரியப் போதுமான இடம் விட்டுள்ளார்கள்’
  ‘நாய் அவன் கூடவே திரியும்’
  ‘மாலை நேரத்தில் கடைத் தெருவில் திரிந்துகொண்டிருப்பான்’

திரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திரி1திரி2திரி3திரி4திரி5

திரி2

வினைச்சொல்திரிய, திரிந்து, திரிக்க, திரித்து

 • 1

  (பால் போன்றவை) பதம் கெட்டுத் திப்பிதிப்பியாக மாறுதல்.

 • 2

  இலக்கணம்
  (ஒரு மெய்யெழுத்து மற்றொரு மெய்யாக) மாறுதல்.

  ‘‘மரம்’ என்ற சொல்லுடன் ‘கள்’ என்ற பன்மை விகுதியைச் சேர்க்கும்போது ‘ம்’ என்ற மெய்யெழுத்து ‘ங்’ என்று திரியும்’

திரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திரி1திரி2திரி3திரி4திரி5

திரி3

துணை வினைதிரிய, திரிந்து, திரிக்க, திரித்து

 • 1

  ‘(விரும்பத் தகாத முறையில்) பலரிடமும் ஒன்றைச் சொல்லுதல்’ என்ற பொருளில் பேசுவது தொடர்பான வினைச்சொற்களுடன் இணைக்கப்படும் துணை வினை.

  ‘அந்தக் கல்யாணமே தன்னால்தான் நடந்தது என்று ஊரெல்லாம் சொல்லித்திரிகிறான்’
  ‘என்னைப் பற்றி வீண் புரளி கிளப்பித்திரியாதே!’

திரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திரி1திரி2திரி3திரி4திரி5

திரி4

வினைச்சொல்திரிய, திரிந்து, திரிக்க, திரித்து

 • 1

  (நார் முதலியவற்றைக் கயிறாக அல்லது துணி, பஞ்சு முதலியவற்றைத் திரியாக) முறுக்குதல்.

 • 2

  (குறிப்பிட்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக உண்மைத் தகவல்களை) மாற்றி வெளிப்படுத்துதல்.

  ‘வரலாற்றையே திரித்து எழுதுகிறார் அவர்’
  ‘‘நான் சொன்னதை நீங்கள் ஏன் திரித்துக் கூறுகிறீர்கள்?’ என்று அவர் கோபமாகக் கேட்டார்’

 • 3

  வட்டார வழக்கு (நன்றாகக் காயவைத்த தானியம், மிளகாய் முதலியவற்றை) அரைத்தல்.

  ‘‘உளுந்தைத் திரித்துக்கொண்டு வா’ என்றான்’
  ‘மாவு திரிக்கும் எந்திரம்’

திரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திரி1திரி2திரி3திரி4திரி5

திரி5

பெயர்ச்சொல்

 • 1

  (குத்துவிளக்கு முதலியவற்றை ஏற்றிவைப்பதற்கான) பட்டையாகவோ குழல் வடிவிலோ திரிக்கப்பட்ட பஞ்சு அல்லது துணி.

  ‘விளக்கின் திரியைத் தூண்டிவிட்டாள்’
  ‘மாலை நேரப் பூஜைக்காக ஐந்து திரிகள் செய்துவைத்தேன்’

 • 2

  (பட்டாசு, வெடிகுண்டு முதலியவற்றில் நெருப்புப் பற்றவைப்பதற்கான) ரசாயனப் பூச்சுடைய இழை.

  ‘அந்தப் பட்டாசில் திரியே இல்லை’