தமிழ் திரிசங்கு நிலை யின் அர்த்தம்

திரிசங்கு நிலை

பெயர்ச்சொல்

  • 1

    இரு பக்க வாய்ப்பையும் இழந்து இடையில் மாட்டிக்கொண்ட நிலை; இரண்டுங்கெட்டான் நிலை.

    ‘நாங்கள் சொந்த இடத்தையும் இழந்துவிட்டு, வந்த இடத்திலும் இருக்க முடியாமல் திரிசங்கு நிலையில் இருக்கிறோம்’
    ‘துறைமுக அதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் சரக்குகளை ஏற்றவும் முடியாமல் இறக்கவும் முடியாமல் திரிசங்கு நிலையில் கப்பல் நின்றுகொண்டிருந்தது’