தமிழ் திருப்தி யின் அர்த்தம்

திருப்தி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்ததால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் நிறைவு உணர்ச்சி; மன நிறைவு.

    ‘அம்மாவின் திருப்திக்காகத் திருவண்ணாமலை போக வேண்டும்’
    ‘தன்னை எதிர்த்தவனைப் பழிவாங்கிவிட்ட திருப்தி அவளுக்கு’
    ‘கட்டுரையை எத்தனை முறை திரும்பத்திரும்ப எழுதினாலும் அவருக்குத் திருப்தி ஏற்படுவதில்லை’