தமிழ் திருப்பி யின் அர்த்தம்

திருப்பி

வினையடை

 • 1

  முதலில் எங்கிருந்ததோ யாரிடமிருந்ததோ அங்கே அல்லது அவரிடமே சேருமாறு; திரும்ப.

  ‘புத்தகத்தை எடுத்த இடத்தில் திருப்பி வைத்துவிடு’
  ‘வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்’
  ‘அகதிகளைத் திருப்பி அனுப்ப ஏற்பாடு நடக்கிறது’

 • 2

  (ஒரு செயலுக்கு) பதிலாக அமையும்படி; எதிர்த்து.

  ‘குழந்தை நம்மை அடித்தால் நாம் அதைத் திருப்பி அடிப்பதா?’
  ‘அமைச்சரைச் சுட்டவன்மீது காவலர்கள் திருப்பிச் சுட்டனர்’

 • 3

  மீண்டும்; திரும்ப.

  ‘நாம் கூறுவதை அப்படியே திருப்பிச் சொல்கிறது கிளி’
  ‘திருப்பித்திருப்பி அதையே சொல்லிக்கொண்டிருக்காதே’