தீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தீர்1தீர்2தீர்3தீர்4

தர1

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (கணிதத்தில்) பெருக்கல் குறி.

  ‘ஐந்து தர இரண்டு சமன் பத்து’

தீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தீர்1தீர்2தீர்3தீர்4

தீர2

வினையடை

 • 1

  ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு; முற்றிலும்.

  ‘தீர விசாரிக்காமல் நான் அப்படிப் பேசியது தவறுதான்’
  ‘நடந்த சம்பவத்தைத் தீர ஆராய்வதற்காக அரசு விசாரணைக் குழு ஒன்றை நியமித்துள்ளது’

தீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தீர்1தீர்2தீர்3தீர்4

தீர்3

வினைச்சொல்தீர, தீர்ந்து, தீர்க்க, தீர்த்து

 • 1

  (ஒரு பொருளை உபயோகத்துக்கு எடுத்துக்கொண்டே இருப்பதால்) இல்லாமல் போதல்.

  ‘சர்க்கரை தீர்ந்துவிட்டது; வாங்க வேண்டும்’
  ‘கொண்டுவந்த பணமெல்லாம் தீர்ந்து விட்டதா?’

 • 2

  (பிரச்சினை, சண்டை, வேலை முதலியவை) முடிவுக்கு வருதல்; முடிதல்.

  ‘பிரச்சினை தீர்ந்து சமரசமாகிவிட்டார்கள்’
  ‘வீட்டு வேலை தீராத வேலை’
  ‘கடல் நீர் இறைத்துத் தீருமா?’

 • 3

  (பசி, களைப்பு அல்லது ஏக்கம், கவலை, பயம் போன்ற உணர்வுகள்) நீங்குதல்.

  ‘உன் சந்தேகம் தீர்ந்ததா?’
  ‘பசி தீரச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கினேன்’

 • 4

  (நோய்) குணமாதல்.

  ‘எந்த மருந்து சாப்பிட்டாலும் இந்த மனநோய் தீராது’
  ‘மருத்துவர் தந்த மருந்தால் வயிற்று வலி முழுவதுமாகத் தீர்ந்துவிட்டது’

 • 5

  (ஒருவரின் பொறுப்பு, கடமை போன்றவை) நிறைவடைதல்.

  ‘உன்னைப் பத்திரமாக உன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டேன். என் பொறுப்பு தீர்ந்தது’
  ‘அவனுக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டால் என் கடமை தீர்ந்துவிடும்’

 • 6

  (ஒன்றைப் பற்றிய குழப்பம், மர்மம் போன்றவை) தெளிவாதல்.

  ‘இப்போதாவது உன் குழப்பம் தீர்ந்ததா?’
  ‘அவருடைய சாவு பற்றிய மர்மம் இன்னும் தீரவில்லை’

 • 7

  (கடன்) அடைபடுதல்.

  ‘இன்னும் இருநூறு ரூபாய் கட்டினால்தான் கடன் தீரும்’

 • 8

  (இறந்தகால வடிவங்கள் மட்டும்) (மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஒருவர்) கடுமையாகப் பாதிக்கப்படுதல்.

  ‘இந்த விஷயம் மட்டும் மேலதிகாரிக்குத் தெரிந்தால், நாம் தீர்ந்தோம்’
  ‘இருப்பில் ஆயிரம் ரூபாய் குறைகிறதே; இன்று நான் தீர்ந்தேன்!’
  ‘இத்தோடு அவன் தீர்ந்தான்’

தீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தீர்1தீர்2தீர்3தீர்4

தீர்4

துணை வினைதீர, தீர்ந்து, தீர்க்க, தீர்த்து

 • 1

  முதன்மை வினை குறிப்பிடும் செயலை எப்படியும் செய்து முடிப்பது என்று உறுதியாக முடிவெடுப்பதைக் குறிப்பிடும் துணை வினை.

  ‘வீடு வாங்கியே தீர்வது என்று தீர்மானித்துவிட்டேன்’
  ‘கடனை அடுத்த ஆண்டுக்குள் அடைத்தே தீர்வது என்று முடிவு செய்துகொண்டேன்’

 • 2

  முதன்மை வினை குறிப்பிடும் செயலை நிர்ப்பந்தத்தின் பேரில் செய்ய வேண்டியதாக இருப்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் துணை வினை.

  ‘அவருடைய வற்புறுத்தலின் காரணமாகச் சாப்பிட்டுத்தீர வேண்டியிருந்தது’

தீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தீர்1தீர்2தீர்3தீர்4

தீர்

வினைச்சொல்தீர, தீர்ந்து, தீர்க்க, தீர்த்து

 • 1

  (ஒரு பொருளை உபயோகத்திற்கு எடுத்துக்கொண்டே இருப்பதன்மூலம்) இல்லாமல் ஆக்குதல்.

  ‘குடித்தே பணத்தைத் தீர்த்துவிட்டான்’
  ‘வாங்கிய சம்பளத்தை ஒரே வாரத்தில் தீர்த்துவிட்டால் மீதி நாட்களை எப்படிச் சமாளிப்பது?’

 • 2

  (பிரச்சினை, சண்டை முதலியவற்றை) முடிவுக்கு வரச் செய்தல்.

  ‘எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் தலைவர் சுலபமாகத் தீர்த்துவிடுவார்’
  ‘இவர்கள் சண்டையைத் தீர்க்க வழி என்ன?’

 • 3

  (பசி, வலி, கவலை, சந்தேகம் முதலியவற்றை) போக்குதல்.

  ‘வயிறார உண்டு பசியைத் தீர்த்துக்கொண்டான்’
  ‘மாணவர்களின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்குக்கூட நேரம் இல்லை’
  ‘உன் குழப்பத்தை நான் தீர்த்துவைக்கிறேன்’
  ‘தீர்க்க முடியாத புதிரா இது?’

 • 4

  (நோயை) குணமாக்குதல்.

  ‘‘இந்த மருந்து எந்தப் பிணியையும் தீர்க்க வல்லது’ என்று அந்த விளம்பரத்தில் போட்டிருந்தது’
  ‘புற்றுநோயைத் தீர்க்கும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை’

 • 5

  (கடனை) அடைத்தல்.

  ‘அவனிடம் பட்ட கடனைத் தீர்க்க வீட்டை விற்றுவிட்டார்’

 • 6

  பேச்சு வழக்கு (பெரும்பாலும் தன் எதிரியை, வேண்டாதவரை) கொல்லுதல்.

  ‘காட்டிக்கொடுத்தவனைத் தீர்த்துவிட்டார்கள்’

 • 7

  கணிதம்
  கொடுக்கப்பட்ட சமன்பாட்டுக்குச் சரியான விடையைக் கண்டுபிடித்தல்.

  ‘3x+2y=13 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்’

தீர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தீர்1தீர்2தீர்3தீர்4

தீர்

துணை வினைதீர, தீர்ந்து, தீர்க்க, தீர்த்து

 • 1

  முதன்மை வினை குறிப்பிடும் செயல் அதிக அளவில் நிகழ்த்தப்பட்டது என்பதைக் குறிப்பிடும் துணை வினை.

  ‘நாள் முழுவதும் தூங்கித்தீர்த்தான்’
  ‘அவன் மேல் எனக்குக் கடும் கோபம்; அவனைத் திட்டித்தீர்த்துவிட்டேன்’