தமிழ் துணுக்கு யின் அர்த்தம்

துணுக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றின்) சிறிய துண்டு.

  ‘பற்களுக்கிடையே தங்கிவிடும் உணவுத் துணுக்குகள் வாய் துர்நாற்றத்துக்குக் காரணமாகின்றன’
  ‘புகையிலை இருந்தால் ஒரு துணுக்குக் கொடு’

 • 2

  (பத்திரிகைகளில் தகவலாகவோ நகைச்சுவையாகவோ தரப்படும்) ஓரிரு வரிகளில் சுவையாக எழுதப்படுவது.

  ‘சிரிப்புத் துணுக்கு’
  ‘நடிகைகளைப் பற்றிப் பத்திரிகையில் துணுக்குகள் நிறைய வெளியாகின்றன’