தமிழ் துப்பறி யின் அர்த்தம்

துப்பறி

வினைச்சொல்துப்பறிய, துப்பறிந்து

  • 1

    (கொலை, திருட்டு, மோசடி போன்ற குற்றங்களில்) தடயங்களைச் சேகரித்தல்/வழக்கு தொடர்பான தகவல்களைத் தேடிக் கண்டறிதல்.

    ‘நகைத் திருட்டு வழக்கில் காவல்துறை துப்பறியத் தொடங்கியுள்ளது’
    ‘இந்தக் கொலை வழக்கை இவர்தான் துப்பறிந்துவருகிறார்’

  • 2

    (பத்திரிகைக்காகப் பிரபலமானவரைப் பற்றி அல்லது பரபரப்பான நிகழ்வு தொடர்பான) தகவலைத் திரட்டுதல்.