தமிழ் துரிதம் யின் அர்த்தம்

துரிதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (செயல்பாடு, வளர்ச்சி முதலியவற்றைக் குறிக்கும்போது) வேகம்; விரைவு.

  ‘பாதாள ரயில் பாதை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது’
  ‘இந்தப் புதிய சலுகைகளினால் தொழில்துறையில் துரிதமான வளர்ச்சி ஏற்படும் என்று நம்பப்படுகிறது’
  ‘ஒரு வாரத்தில் மணமகன் வெளிநாடு செல்வதால் திருமண வேலைகள் துரித கதியில் நடந்தன’

 • 2

  சீக்கிரம்.

  ‘துரிதமாகப் பேசி முடி; ரயிலுக்கு நேரமாகிறது’

 • 3

  (இசையில்) லயத்தில் விரைவு.