தமிழ் துரும்பு யின் அர்த்தம்

துரும்பு

பெயர்ச்சொல்

 • 1

  (மரம், செடி, கொடி முதலியவற்றின்) மெல்லிய சிறு குச்சி.

  ‘வீட்டில் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாதவன் இங்கு இவ்வளவு வேலை செய்கிறானா!’
  ‘நோயில் விழுந்தவர் இப்படித் துரும்பாக இளைத்துப்போய்விட்டாரே?’

 • 2

  வட்டார வழக்கு தூசு.

  ‘தண்ணீரில் எவ்வளவு துரும்பு கிடக்கிறது பார்’
  ‘கண்ணில் ஏதோ துரும்பு விழுந்துவிட்டது; உறுத்திக்கொண்டே இருக்கிறது’

 • 3

  மதிப்பு இல்லாத ஒன்று.

  ‘அவனுக்கு உறவினர்கள் அனைவரும் துரும்புதான்’
  ‘பணத் திமிரால் எல்லோரையும் துரும்பாக மதிக்கிறான்’