தமிழ் துரோகம் யின் அர்த்தம்

துரோகம்

பெயர்ச்சொல்

 • 1

  (தன்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவரின்) நம்பிக்கைக்கும் நலனுக்கும் மாறாக அல்லது எதிராகச் செய்யும் செயல்.

  ‘மக்கள் உங்கள்மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்குத் துரோகம் செய்துவிடாதீர்கள்!’
  ‘நண்பன் துரோகம் செய்வான் என்று அவன் நினைக்கவே இல்லை’

 • 2

  (திருமண உறவுக்கு வெளியே கணவனோ மனைவியோ) நம்பிக்கைக்கு மாறாக நடந்து கொள்வது.

  ‘கணவனின் துரோகம் அவளைக் கொதிக்க வைத்தது’