தமிழ் துல்லியம் யின் அர்த்தம்

துல்லியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (நேரம், அளவு முதலியவற்றில்) கூடுதல் அல்லது குறைவு என்று இல்லாமல் மிகச் சரியாக இருக்கும் தன்மை.

  ‘உன்னுடைய பிறந்த நேரம் துல்லியமாகத் தெரிந்தால்தான் சரியாக ஜாதகம் கணிக்க முடியும்’
  ‘எப்போதோ நடந்த சம்பவத்தைப் பற்றி இப்போது எப்படித் துல்லியமாகக் கூற முடியும்?’
  ‘மின்னணுத் தராசுகள் மிகத் துல்லியமாக அளக்கும்’

 • 2

  மறைக்கப்படுவதோ தடுக்கப்படுவதோ சிறிதும் இல்லாத நிலை; தெளிவு.

  ‘சூரிய ஒளியில் அவள் முகம் துல்லியமாகத் தெரிந்தது’
  ‘அவ்வளவு தூரத்தில் பேசுவது எவ்வளவு துல்லியமாகக் காதில் விழுகிறது!’
  ‘அவன் நமக்கு உதவி செய்ய மாட்டான் என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொண்டேன்’