தமிழ் துளசி யின் அர்த்தம்

துளசி

பெயர்ச்சொல்

  • 1

    காரச் சுவையும் மணமும் மருத்துவக் குணமும் கொண்ட சிறு இலை; மேற்குறிப்பிட்ட இலைகளையும் கரு நீல நிறத் தண்டுகளையும் கொண்ட ஒரு வகைச் சிறு செடி.

    ‘வைணவக் கோயில்களில் துளசி இலைகளைப் பிரசாதமாகத் தருவார்கள்’
    ‘துளசியைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டார்’