தமிழ் துள்ளல் யின் அர்த்தம்

துள்ளல்

பெயர்ச்சொல்

 • 1

  சற்று விரைவாக மேலெழும்பிக் கீழே வரும் செயல்.

  ‘நண்பனைக் கண்டதும் படுக்கையிலிருந்து துள்ளலுடன் எழுந்தான்’
  ‘மானின் துள்ளல்’
  ‘மேலதிகாரியைக் கண்டதும் ஒரே துள்ளலில் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார்’

 • 2

  துடிப்பு.

  ‘அவனிடம் இருந்த இளமைத் துள்ளல் எல்லாம் காணாமல் போய்விட்டது’

 • 3

  பேச்சு வழக்கு (திமிர் கொண்டு) ஆர்ப்பாட்டமாக நடந்துகொள்ளும் போக்கு.

  ‘அவரிடமிருந்த அந்தத் துள்ளல், திமிர், அகங்காரம் எல்லாம் எங்கே போயிற்று?’