தமிழ் துவக்க ஆட்டக்காரர் யின் அர்த்தம்

துவக்க ஆட்டக்காரர்

பெயர்ச்சொல்

  • 1

    (கிரிக்கெட் விளையாட்டில்) பந்துவீச்சை எதிர்கொள்ளும் அணியின் சார்பில் களத்தில் இறங்கும் முதல் இரண்டு ஆட்டக்காரர்களில் ஒருவர்.

    ‘டெண்டுல்கர் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்’
    ‘துவக்க ஆட்டக்காரராக அனுபவமில்லாத ஒரு வீரரை இறக்கியிருக்கிறார்கள்’