தமிழ் தூக்கியெறி யின் அர்த்தம்

தூக்கியெறி

வினைச்சொல்-எறிய, -எறிந்து

  • 1

    (எந்தவித முக்கியத்துவமோ மதிப்போ அளிக்காமல்) உடனடியாக நீக்குதல் அல்லது அகற்றிவிடுதல்.

    ‘மக்கள் புரட்சி செய்து ராணுவ ஆட்சியைத் தூக்கியெறிந்தனர்’
    ‘ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மத்திய அரசு தூக்கியெறிய முனைவது நியாயமல்ல’