தமிழ் தூங்கு யின் அர்த்தம்

தூங்கு

வினைச்சொல்தூங்க, தூங்கி

  • 1

    (பெரும்பாலும் இரவில்) படுத்த நிலையில் கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுத்தல்; உறங்குதல்.

    ‘குழந்தை தூங்கிவிட்டதா?’
    உரு வழக்கு ‘தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளைக்கூடக் கவனிக்காமல் நிர்வாகம் தூங்குகிறதா?’
    உரு வழக்கு ‘வங்கியில் அவன் பெயரில் பத்து லட்சம் ரூபாய் தூங்கிக்கொண்டிருக்கிறது’