தமிழ் தூர யின் அர்த்தம்

தூர

வினையடை

 • 1

  தள்ளி; தொலைவில்.

  ‘பட்டாசில் தீ வைத்துவிட்டுத் தூர நின்றுகொண்டான்’
  ‘‘சீ! தூரப் போ’ என்று நாயை விரட்டினார்’

தமிழ் தூர் யின் அர்த்தம்

தூர்

வினைச்சொல்தூர்ந்து, தூர்க்க, தூர்த்து

 • 1

  (கிணறு, குளம் போன்றவற்றின் ஊற்றுக்கண்ணில் அல்லது ஆறு முதலியவற்றில் நீர் செல்லும் வழியில் மண் போன்றவை சேர்வதால்) அடைபடுதல்.

  ‘தூர்ந்து கிடக்கும் குளம்’
  ‘தூர்ந்த கிணறு’

 • 2

  பேச்சு வழக்கு (ஆபரணம் அணிந்துகொள்வதற்காகக் காதில் அல்லது மூக்கில் போடப்பட்ட துளை) அடைபடுதல்; மூடிக்கொள்ளுதல்.

  ‘எனக்குக் காது தூர்ந்துபோய் இரண்டு வருடம் ஆகிறது’

தமிழ் தூர் யின் அர்த்தம்

தூர்

வினைச்சொல்தூர்ந்து, தூர்க்க, தூர்த்து

 • 1

  (கிணறு, ஆறு முதலியவற்றை அல்லது வயல் போன்றவற்றை) மண், கல் போன்றவை கொட்டி மூடுதல்.

  ‘யாருக்கும் பயன்படாமல் இருக்கும் கிணற்றைத் தூர்த்துவிடலாம்’
  ‘புறநகர்ப் பகுதிகளில் வயல்களைத் தூர்த்துப் புதிய கட்டடங்கள் எழுப்பப்படுகின்றன’

தமிழ் தூர் யின் அர்த்தம்

தூர்

பெயர்ச்சொல்

 • 1

  (கிணறு, ஏரி, வாய்க்கால் முதலியவற்றின்) அடியில் சேர்ந்திருக்கும் மண், சகதி முதலியவை.

  ‘கிணற்றில் தூர் எடுத்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன’
  ‘குளம் தூர் வாராமல் கிடக்கிறது’

தமிழ் தூர் யின் அர்த்தம்

தூர்

பெயர்ச்சொல்

 • 1

  (செடிகளின்) கிளைத்த வேர்த் தொகுதி.

  ‘நோய் தாக்கப்பட்ட பயிர்களைத் தூரோடு பிடுங்கி எறிந்துவிட வேண்டும்’
  ‘நீர் விடும்போது தூரைச் சுற்றிக் கிளறிவிட வேண்டும்’