தூற்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தூற்று1தூற்று2

தூற்று1

வினைச்சொல்தூற்ற, தூற்றி

 • 1

  (நெல், பருப்பு போன்ற தானியங்களில் உள்ள பதர் முதலியவற்றைப் போக்குவதற்காக) முறத்தில் வைத்து ஆட்டிப் பதரையும் தானியத்தையும் பிரிந்து விழச் செய்தல்.

  ‘நெல்லைத் தூற்றி அளந்து மூட்டையாகக் கட்டிவைத்தான்’

 • 2

  (மண், புழுதி ஆகியவற்றைக் காற்றில்) அள்ளி வீசுதல்.

  ‘சிறுவர்கள் மண்ணைத் தூற்றி விளையாடினார்கள்’

தூற்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தூற்று1தூற்று2

தூற்று2

வினைச்சொல்தூற்ற, தூற்றி

 • 1

  (ஒருவரைப் பற்றி) அவதூறாகப் பேசுதல் அல்லது எழுதுதல்; பழித்தல்.

  ‘தூற்றுவோர் தூற்றட்டும். நீ உன் நேர் வழியில் தொடர்ந்து செல்’
  ‘சிலர் பொறாமையால் என்னைத் தூற்றித் திரிகின்றனர்’