தெரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தெரி1தெரி2

தெரி1

வினைச்சொல்தெரிய, தெரிந்து, இறந்தகால முற்று வடிவங்கள் மட்டும்

 • 1

  (கண் புலனுக்கு உரிய செயல்களாகக் கூறப்படும் வழக்கு)

  1. 1.1 (கண்ணுக்கு) புலனாதல்; புலப்படுதல்

   ‘இங்கிருந்து பார்த்தாலே கோயிலின் கோபுரம் தெரியும்’
   ‘ஜனனல் வழியாகத் தெரிந்த இயற்கைக் காட்சிகள் மனத்திற்கு இன்பம் தந்தன’

  2. 1.2 (கண் புலன்) தொழிற்படுதல்; செயல்படுதல்

   ‘எண்பது வயதிலும் அவருக்கு நன்றாகக் கண் தெரிகிறது’
   ‘கிழவிக்குக் காதும் கேட்காது, கண்ணும் தெரியாது’

 • 2

  (அறிவு பெறுதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (ஒருவரையோ ஒன்றையோ குறித்த விபரங்களை அல்லது ஒரு செயலை எப்படிச் செய்வது என்ற) அறிவைத் தன்னிடத்தில் பெற்றிருத்தல்

   ‘அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்’
   ‘அவருக்குப் பல மொழிகள் தெரியும்’
   ‘உனக்கு யாரிடம் எப்படிப் பேசுவது என்றே தெரியவில்லை’

  2. 2.2 (நிலைமையை) அறிய வருதல்; புரிதல்

   ‘படைகள் பின்வாங்கியிருப்பதாகப் பத்திரிகைச் செய்திகளிலிருந்து தெரிகிறது’

  3. 2.3 (ஒருவருக்கு ஒன்று) தோன்றுதல்; மனத்தில் படுதல்

   ‘உனக்குத் தவறாகத் தெரிவது மற்றவர்களுக்குச் சரியாகத் தெரியலாம்’
   ‘மழை வரும்போல் தெரிகிறது’

தெரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தெரி1தெரி2

தெரி2

துணை வினைதெரிய, தெரிந்து, இறந்தகால முற்று வடிவங்கள் மட்டும்

 • 1

  (‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும்போது) ஒன்று நடப்பதற்குச் சாத்தியம் இருத்தல் என்பதைக் குறிப்பிடும் ஒரு துணை வினை.

  ‘அவன் கீழே விழத்தெரிந்தான். நான் பிடித்துக்கொண்டேன்’
  ‘ரயிலில் அடிபட்டுச் சாகத்தெரிந்தான்’