தமிழ் தெரிந்துகொள் யின் அர்த்தம்

தெரிந்துகொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒருவரையோ ஒன்றையோ குறித்த விபரங்களை) அறிதல்; அறியவருதல்.

    ‘அவன் எப்படிப்பட்டவன் என்பதைப் பற்றி நீ தெரிந்துகொள்ள வேண்டும்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு தேர்ந்தெடுத்தல்.

    ‘இந்தக் கூட்டத்திற்கு அவரைத் தலைவராகத் தெரிந்து கொண்டோம்’