தமிழ் தொகு யின் அர்த்தம்

தொகு

வினைச்சொல்தொகுக்க, தொகுத்து

 • 1

  பொதுவான அம்சத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பலவற்றை ஒன்றுசேர்த்தல்.

  ‘தஞ்சை மாவட்ட நாட்டுப்பாடல்களைத் தொகுத்து ஒரு தனிப் புத்தகமாக வெளியிட்டார்’

 • 2

  (நிகழ்ச்சி, செய்தி, வரலாறு போன்றவற்றை) முறைப்படி ஒன்றன்பின் ஒன்று வருமாறு அமைத்தல்; நிரல்படுத்துதல்.

  ‘அவரது வாழ்க்கை வரலாற்றை மிகவும் சிரமப்பட்டுத் தொகுத்திருக்கிறார்’
  ‘நம் கல்லூரி ஆண்டுவிழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்’
  ‘பிரச்சினைகளைத் தொகுத்துப் பார்த்தால் தீர்வுக்கான வழி கிடைக்கலாம்’

 • 3

  (அகராதி, சொல்லடைவு முதலியவை தயாரிப்பதற்காக) உள்ளடக்கம் எழுதி முறைப்படுத்துதல்.