தமிழ் தொண்டை யின் அர்த்தம்

தொண்டை

பெயர்ச்சொல்

 • 1

  உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான, கழுத்தின் உள் பகுதி.

  ‘தொண்டைப் புண்ணுக்குப் பாலில் மஞ்சள்தூள் போட்டுக் குடிக்கலாம்’
  ‘குழந்தையின் தொண்டையில் காசு மாட்டிக்கொண்டது’
  ‘காது, மூக்கு, தொண்டை மருத்துவர்’

 • 2

  கழுத்தின் முன்பகுதி.

  ‘தொண்டையைப் பிடித்து நெரிக்காதே’

 • 3

  (ஒருவரின்) குரல்.

  ‘அவருக்கு நல்ல வளமான தொண்டை’
  ‘தொண்டை கரகரப்பாக இருந்ததால் அவரால் பாட முடியவில்லை’
  ‘தொண்டையைப் பழக்கினால்தான் நல்ல சங்கீதத்தை வெளிப்படுத்த முடியும்’