தமிழ் தொனி யின் அர்த்தம்

தொனி

வினைச்சொல்தொனிக்க, தொனித்து

 • 1

  (குறிப்பிட்ட உணர்ச்சி, பொருள் போன்றவை) நேரடியாக வெளிப்படுத்தப்படாமல் குறிப்புப் பொருளாக வெளிப்படுதல்.

  ‘தவறான அர்த்தம் தொனிக்கும்படியாகப் பேசினான்’
  ‘அவருடைய பாடலில் தொனிக்கும் ஏக்கம் மனத்தை நெகிழவைத்தது’

 • 2

  (குரலில் அன்பு) வெளிப்படுதல்.

  ‘நீண்ட நாள் கழித்துச் சந்தித்த பேரனிடம் பாட்டி அன்பு தொனிக்கப் பேசினாள்’

தமிழ் தொனி யின் அர்த்தம்

தொனி

பெயர்ச்சொல்

 • 1

  நேரடியாக இல்லாத குறிப்புப் பொருள் தரும் வெளிப்பாடு.

  ‘அப்பாவின் குரலில் இருந்த மிரட்டல் தொனி அவனைப் பயமுறுத்தியது’

 • 2

  (ஒன்றை உணர்த்தும் விதமான) ஒலிப்பு வகை.

  ‘கவிதையின் தொனியும் அதன் பொருளை நிர்ணயிக்கிறது’