தமிழ் தொல்லைப்படுத்து யின் அர்த்தம்

தொல்லைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒருவருக்கு) எரிச்சலை அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுதல்; தொந்தரவு தருதல்.

    ‘வீட்டுக்காரர் ரொம்பத் தொல்லைப்படுத்தியதால் வீட்டைக் காலிசெய்துவிட்டேன்’
    ‘இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாதவாறு கொசுக்கள் தொல்லைப்படுத்துகின்றன’
    ‘ஊருக்குப் போய்வருவதற்குள் கார் தொல்லைப்படுத்திவிட்டது’