தமிழ் தேக்கம் யின் அர்த்தம்

தேக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  நீர் ஓடாமல் தடைபட்டிருக்கும் நிலை.

  ‘கழிவுகளைக் கொட்டுவதால் வடிகாலில் தேக்கம் ஏற்படுகிறது’

 • 2

  (ஒரு வேலை) மேற்கொண்டு முன்னேற்றமடையாமல் அல்லது (ஒரு பொருள்) விற்பனையாகாமல் இருக்கும் நிலை; முடக்கம்.

  ‘அரசியல் சூழ்நிலைகளால் தொழில் வளர்ச்சியில் தேக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்’
  ‘கைத்தறித் துணி விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது’