தமிழ் தேக்கு யின் அர்த்தம்

தேக்கு

வினைச்சொல்தேக்க, தேக்கி

 • 1

  ஓடும் அல்லது வழியும் திரவத்தைத் தடுத்து (ஓரிடத்தில்) தங்கச் செய்தல்.

  ‘மழை நீரை நீர்த்தேக்கங்களில் தேக்கி வைத்துக் குடிநீராகப் பயன்படுத்துகிறோம்’
  ‘பிழியப்பட்ட கரும்புச் சாறு தொட்டிகளில் தேக்கப்படுகிறது’
  உரு வழக்கு ‘உணர்ச்சிகளைப் பார்வையில் தேக்கியிருந்தான்’

தமிழ் தேக்கு யின் அர்த்தம்

தேக்கு

பெயர்ச்சொல்

 • 1

  அகலமான இலைகளை உடைய, (மரச் சாமான்கள் செய்வதற்கு மிகவும் சிறந்ததாகக் கருதப்படும்) உறுதியான, உயரமாக வளரும் மரம்.

  ‘கோயிலில் தேக்கு இலையில் பொங்கல் வைத்து எல்லாருக்கும் தந்தார்கள்’