தமிழ் தேர்ச்சி யின் அர்த்தம்

தேர்ச்சி

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (ஒரு துறையில்) பயிற்சிமூலம் பெறும் நுணுக்கமான அறிவு அல்லது திறமை.

  ‘அவர் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்’
  ‘தேர்ச்சியான நடிப்பு’

 • 2

  (தேர்வில் தேவையான மதிப்பெண்கள் பெற்று அடையும்) வெற்றி.

  ‘பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாள்’
  ‘பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகம்’