தமிழ் தேர்வு யின் அர்த்தம்

தேர்வு

பெயர்ச்சொல்

 • 1

  கல்வி நிறுவனங்களில் அல்லது தொழில் நிறுவனங்களில் ஒருவருடைய திறமை, படிப்பு முதலியவற்றைச் சோதித்துப் பார்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட முறை; பரீட்சை.

  ‘பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவன்’
  ‘தேர்தலை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன’

 • 2

  (பலவற்றிலிருந்து ஒன்றை அல்லது பலரிலிருந்து ஒருவரை) தேர்ந்தெடுக்கும் முறை.

  ‘யார் தேர்தலில் போட்டியிடுவது என்பதுபற்றிய தேர்வு இன்றையக் கட்சிக் கூட்டத்தில் முடிவுசெய்யப்படும்’
  ‘புத்தகங்களை அவர் தேர்வுசெய்யும் முறையே தனி!’