தமிழ் தேர்ந்த யின் அர்த்தம்

தேர்ந்த

பெயரடை

  • 1

    (கலை, தொழில் முதலியவற்றில்) திறமை வாய்ந்த.

    ‘தேர்ந்த இசைக் கலைஞனாக உருவாகக் கடும் பயிற்சி தேவை’
    ‘தேர்ந்த தொழிலாளி, மணி ஒன்றுக்கு இருநூறு பீடிகள் சுற்றுவார்’
    ‘தேர்ந்த கபடி வீரர்’