தமிழ் தேற்று யின் அர்த்தம்

தேற்று

வினைச்சொல்தேற்ற, தேற்றி

 • 1

  (வருந்துபவரை) அமைதியடையச் செய்தல்; சமாதானப்படுத்துதல்; ஆற்றுதல்.

  ‘இளம் வயதில் மனைவியை இழந்தவரை எப்படித் தேற்றுவது?’
  ‘தோல்விதான் வெற்றியின் முதல் படி என்று கூறித் தேர்வில் தோல்வியடைந்த நண்பனைத் தேற்றினோம்’

 • 2

  பேச்சு வழக்கு (உடலை) பேணுதல்; (உணவு தந்து) கவனித்தல்.

  ‘ஊரிலிருந்து வந்த மகனுக்கு ருசியாகச் சமைத்துப்போட்டுத் தேற்றி அனுப்பினாள்’

 • 3

  நல்ல நிலைக்குக் கொண்டுவருதல்.

  ‘பெற்றோர் இல்லாத பிள்ளையை நீங்கள்தான் தேற்றிவிட வேண்டும்’