தமிழ் தோதுப்படு யின் அர்த்தம்

தோதுப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சௌகரியப்படுதல்; ஏற்ற வகையில் வசதியாக அமைதல்.

    ‘தோதுப்பட்டால் அலுவலகத்திலிருந்து வரும்போது வீட்டுச் சாமான்கள் வாங்கிவந்துவிடுங்கள்’
    ‘பலசரக்குக் கடை வேலை அவனுக்குத் தோதுப்பட்டுவரவில்லை’
    ‘கல்யாணத்திற்கு வர எனக்குத் தோதுப்படாது. நீ மட்டும் போய் வந்துவிடு’