தமிழ் தோப்புக்கரணம் போடு யின் அர்த்தம்

தோப்புக்கரணம் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (ஒருவருக்கு அளவுக்கதிகமாக) பணிந்துபோதல்.

    ‘என் கஷ்டத்திற்குப் பணம் கொடுத்து உதவினார் என்பதற்காக அவருக்குத் தோப்புக்கரணம் போட என்னால் முடியாது’
    ‘அவர் பெரிய பணக்காரராக இருந்தாலென்ன? அதனால் எல்லோரும் அவருக்குத் தோப்புக்கரணம் போட வேண்டுமா?’