தமிழ் தோற்கடி யின் அர்த்தம்

தோற்கடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    (போட்டி யில்) தோல்வி அடையச் செய்தல்.

    ‘நம் அணி நன்றாக விளையாடியும் தோற்கடிக்கப்பட்டது’
    ‘அவர் தன்னோடு போட்டியிட்டவர்களை ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்’
    ‘இன்னும் சில ஆண்டுகளுக்கு ஓட்டப் பந்தயத்தில் இவரைத் தோற்கடிக்க யாரும் இல்லை’