தமிழ் தோற்றம் யின் அர்த்தம்

தோற்றம்

பெயர்ச்சொல்

 • 1

  பார்வைக்குத் தெரியும் புற வடிவம்; உருவம்.

  ‘அவருடைய நெடிய தோற்றம் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தது’
  ‘அவள் தோற்றத்தில் மயங்கி அவளைக் கல்யாணம் செய்துகொண்டார்’

 • 2

  (மனத்தில் எழும்) காட்சி.

  ‘அந்த அனாதைச் சிறுவனைக் கண்டதும் என் சிறு வயதுத் தோற்றம் கண்முன் தெரிந்தது’
  ‘ஊரே உறங்குவது போன்ற தோற்றம்’

 • 3

  (ஒருவர்) பிறந்த நாள், மாதம், வருடம் ஆகியவற்றின் குறிப்பு.

  ‘மாலை போட்டிருந்த படத்தில் இறந்தவரின் தோற்றமும் மறைவும் குறிக்கப்பட்டிருந்தன’
  ‘இறந்துபோன தொழிலதிபரின் படமும் அதற்குக் கீழ் ‘தோற்றம்: 17.08.1952, மறைவு: 03.12.2005’ என்றும் பத்திரிகையில் அச்சிடப்பட்டிருந்தது’

 • 4

  ஒன்று உருவாகும் ஆரம்ப நிலை.

  ‘மனிதன் நெருப்பின் பயனைக் கண்டறிந்ததை அறிவியலின் தோற்றமாகக் கூறலாம்’
  ‘நாகரிகத்தின் தோற்றம் என்பது வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது’

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவர் அல்லது ஒன்று) பார்வைக்குத் தெரியும் தன்மை.

  ‘அவள் நல்ல தோற்றமானவள்’
  ‘அவனுடைய தோற்றத்துக்கு என்ன குறை?’