தமிழ் தோஷம் யின் அர்த்தம்

தோஷம்

பெயர்ச்சொல்

 • 1

  (கிரக நிலை, தீய செயல் போன்றவற்றின்) தீங்கு விளைவிக்கக்கூடிய அம்சம்.

  ‘பெண்ணுக்குச் செவ்வாய் தோஷம் இருக்கிறது’
  ‘நாக தோஷம்’

 • 2

  தவிர்க்க முடியாத குறை.

  ‘கூடப் பிறந்த தோஷம், இவனை வைத்துக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது’
  ‘பழகிய தோஷத்திற்காக உன்னை மன்னித்துவிடுகிறேன்’

 • 3

  (ஒன்றில் அல்லது ஒருவரிடம் உள்ள) குறை.

  ‘இந்த வைரத்தில் தோஷம் இருக்கிறது’
  ‘இந்த வீட்டில் என்ன தோஷத்தைக் கண்டாய்?’