தையல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தையல்1தையல்2

தையல்1

பெயர்ச்சொல்

 • 1

  (துணி, தோல் போன்றவற்றில் இரு துண்டுகளை அல்லது கிழிசலை) இணைத்திருக்கும் நூல் இணைப்பு.

  ‘சட்டைத் தையல் பிரிந்திருக்கிறது’
  ‘பையில் தையல் சரியாக இல்லை’

 • 2

  துணியை ஆடையாகத் தைக்கும் தொழில்.

  ‘இப்போது தையல் படித்துக்கொண்டிருக்கிறேன்’

 • 3

  (அறுவைச் சிகிச்சையின்போது நரம்பு போன்றவற்றால்) இரண்டு பகுதிகளை சேர்த்துத் தைத்தல்.

  ‘காயம் ஏற்பட்ட இடத்தில் பத்துத் தையல்கள் போட்டார்கள்’
  ‘என் நெற்றியில் போட்ட தையலை நாளை பிரிக்கிறார்கள்’

தையல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தையல்1தையல்2

தையல்2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு பெண்.