தமிழ் தொகுப்பு யின் அர்த்தம்

தொகுப்பு

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றாகத் தொகுக்கப்பட்டு ஓரிடத்தில் வைக்கப்பட்டிருப்பவை.

  ‘அவருடைய தொகுப்பில் பல அரிய புத்தகங்கள் உள்ளன’
  ‘அஞ்சல் தலைத் தொகுப்பு’

 • 2

  மொத்தமாகச் சேர்க்கப்பட்டு ஒன்றாக அமைந்த நூல்.

  ‘சிறுகதைத் தொகுப்பு’
  ‘கவிதைத் தொகுப்பு’

 • 3

  குறிப்பிட்ட பொருள்களைத் திரட்டி வைத்திருப்பது.

  ‘மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான அரிசியை மத்தியத் தொகுப்பிலிருந்து பெறுகின்றன’