தமிழ் தொலைவு யின் அர்த்தம்

தொலைவு

பெயர்ச்சொல்

 • 1

  இரு இடங்களுக்கு அல்லது பொருள்களுக்கு இடையில் உள்ள அளவு; (குறிப்பிடப்படும் ஒருவரிடமிருந்து அல்லது ஒன்றிலிருந்து) விலகியிருக்கும் அளவு; தூரம்.

  ‘அந்த ஊர் இங்கிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?’
  ‘இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவுவரை இந்த வானொலி நிலையத்தின் ஒலிபரப்பைக் கேட்கலாம்’

 • 2

  தூரத்தில் உள்ள இடம்.

  ‘நீங்கள் தொலைவிலிருந்து வருகிறீர்கள் போலிருக்கிறது’