தமிழ் நக்கு யின் அர்த்தம்

நக்கு

வினைச்சொல்நக்க, நக்கி

 • 1

  நாக்கினால் தடவுதல்.

  ‘பாசத்தோடு பசு தன் கன்றை நக்கியது’
  ‘‘சாப்பிட்டுவிட்டுக் கையை நக்காதே’ என்று அம்மா திட்டினாள்’
  ‘நாய் நீரை நக்கிக் குடிக்கும்’

தமிழ் நீக்கு யின் அர்த்தம்

நீக்கு

வினைச்சொல்நீக்க, நீக்கி

 • 1

  (வேண்டாததை) இல்லாதபடி ஆக்குதல்; அகற்றுதல்.

  ‘பூசணிக்காயின் தோலைச் சீவியபின் விதைப் பகுதியை நீக்கிவிட்டுத் துருவவும்’
  ‘இந்தச் சலவைத்தூள் எந்தவித அழுக்கையும் நீக்கிவிடும்’
  ‘நோய் நீக்க மருந்து தேவை’
  ‘துன்பம் நீக்கும் மருந்து இசைதான்’
  ‘இறக்குமதி வரியை நீக்கினால் பத்திரிகைக் காகிதத்தின் விலை குறையும்’
  ‘பிரயோகிக்கக்கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்தினால் மட்டுமே அவைக்குறிப்பிலிருந்து அவற்றை நீக்க வேண்டும்’

 • 2

  (ஒருவரைப் பதவியிலிருந்து) வெளியேற்றுதல்/(ஒருவரின் பெயரைப் பட்டியல் போன்றவற்றிலிருந்து) எடுத்தல்.

  ‘அவரைப் பதவியிலிருந்து நீக்க உத்தரவு வந்திருக்கிறது’
  ‘வாக்காளர் பட்டியலிலிருந்து சில பெயர்களை நீக்கியிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது’

 • 3

  (பக்கவாட்டில்) தள்ளுதல்; (ஒருபுறமாக) விலக்குதல்.

  ‘ஜன்னல் திரையை நீக்கியதும் குளிர்ந்த காற்று உள்ளே வந்தது’
  ‘மணலை நீக்கியதும் புதையுண்டு கிடந்த பெட்டி தெரிந்தது’

 • 4

  (விதித்திருக்கும் தடையை) முடிவுக்குக் கொண்டுவருதல்; விலக்குதல்.

  ‘இந்தியாமீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது’