நச்சு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நீச்சு1நச்சு2நச்சு3

நீச்சு1

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு நீச்சல்.

  ‘நீச்சுத் தெரியாதவன் குளத்தில் இறங்கலாமா?’

நச்சு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நீச்சு1நச்சு2நச்சு3

நச்சு2

பெயர்ச்சொல்

 • 1

  நஞ்சு; விஷம்.

  ‘நச்சுக் கிருமிகள்’
  ‘நச்சுப் பாம்பு’
  ‘நச்சு வாயு’

 • 2

  உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் வேதிப் பொருள்.

  ‘அரிப்பை ஏற்படுத்தக் கூடிய நச்சுத் தாவரம்’
  ‘நச்சுத் தன்மை வாய்ந்த கழிவு நீர்’
  ‘தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை காற்றுமண்டலத்தை மாசுபடுத்துகிறது’
  ‘பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத் தன்மை உணவுப் பொருள்களில் கலப்பதால் நாம் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது’
  ‘பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் டையாக்சின் என்ற நச்சுப் பொருள் காற்றுடன் கலக்கிறது’

நச்சு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நீச்சு1நச்சு2நச்சு3

நச்சு3

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு ஒவ்வொரு சிறு விஷயத்திலும் எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் இருப்பவர் அல்லது இருப்பது.

  ‘இந்த மாதிரியான கடிகாரத்தைப் பழுதுபார்ப்பது நச்சுப் பிடித்த வேலை’
  ‘அவரிடம் வேலை செய்ய முடியாது; அவர் சரியான நச்சு’