தமிழ் நீந்து யின் அர்த்தம்

நீந்து

வினைச்சொல்நீந்த, நீந்தி

  • 1

    (குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில்) கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்/(மீன், ஆமை முதலியவை) குறிப்பிட்ட விதத்தில் துடுப்பு, வால் முதலியவற்றை அசைப்பதன்மூலம் நீரில் நகர்தல்.

    ‘ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து நீந்துவது கடினம்’
    ‘மீன் நீந்துவதற்கு அதன் துடுப்புகள் உதவுகின்றன’