தமிழ் நன்மை யின் அர்த்தம்

நன்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சாதகமாக இருக்கும் விளைவு; பயன்.

  ‘இந்தத் திட்டத்தால் விளையும் நன்மைகளை மக்களிடம் விளக்கிக் கூறப்போகிறோம்’
  ‘சில மருந்துகளினால் உடலுக்கு ஏற்படும் நன்மையைக் காட்டிலும் தீமையே அதிகம்’
  ‘தற்செயலாக உன்னைப் பார்த்தது நன்மையாக முடிந்தது’

 • 2

  பயன் விளைவிக்கும் நல்ல செயல்.

  ‘பிறருக்கு நன்மையே செய்தவர்’

 • 3

  (ஒருவருடைய) நலன்.

  ‘உங்கள் நன்மைக்காகத்தான் இதைச் சொல்கிறேன்’
  ‘பொதுமக்களின் நன்மைக்கு உகந்ததைத்தான் நாங்கள் செய்கிறோம்’
  ‘நாட்டின் நன்மையைக் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு இது’