தமிழ் நம்பிக்கை யின் அர்த்தம்

நம்பிக்கை

பெயர்ச்சொல்

 • 1

  தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தரும் என்பதால் குறிப்பிட்ட சிந்தனை, கருத்து, நோக்கம் போன்றவற்றில் ஒருவர் கொண்டிருக்கும் பிடிப்பு.

  ‘மதத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லை’
  ‘அவர் மார்க்சியத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்’

 • 2

  தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.

  ‘தங்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் இந்திய அணியினர் விளையாடினார்கள்’
  ‘தமிழக அணி வென்றுவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது’
  ‘அவன்மேல் நம்பிக்கை இல்லை என்றால் பணத்தைக் கொடுக்காதே’
  ‘அவள் என் நம்பிக்கையை வீணாக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்’

 • 3

  தானோ மற்றவரோ இருக்கும் அல்லது செயல்படும் விதம் சரியானது என்ற மனஉறுதி.

  ‘நான் எடுத்த முடிவு சரியானதுதான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’
  ‘எந்த வேலையையும் நம்பிக்கையுடன் செய்’
  ‘அவன் பொறுப்புடன் நடந்துகொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’
  ‘அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது’