நயம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நயம்1நயம்2

நயம்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (இலக்கியம், இசை போன்ற கலைகளில் அல்லது குறிப்பிட்ட படைப்பில் காணப்படும்) நுண்மையான கூறுகளும் அவற்றின் பண்பட்ட வெளிப்பாடுகளும்.

  ‘அவர் பயன்படுத்தியிருக்கும் சொற்றொடர்கள் அவருடைய கவிதைக்குக் கூடுதலான நயத்தை அளிக்கின்றன’
  ‘அவர் நயம் மிக்க ஆழ்வார் பாசுரங்களை இனிமையாகப் பாடினார்’
  ‘கலை நயம் வாய்ந்த சிற்பங்கள்’
  ‘கவிதையில் சொல் நயம் மட்டும் இருந்தால் போதுமா?’

 • 2

  (ஒரு செயலைச் செய்வதில் அல்லது பேச்சில் வெளிப்படும்) பக்குவம்.

  ‘விருந்தோம்பலை எப்படி நயமாகச் செய்வது என்று தெரிந்துகொள்ளாமல் இருக்கிறான்’
  ‘கோலத்தை அவள் போட்ட நயம் அருமை’
  ‘நம்முடைய குறைகளை நயமாகவும் உறுதியாகவும் மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூற முடியும்’
  ‘நயமாகப் பொருள் சொல்வதில் எங்கள் ஆசிரியர் திறமை வாய்ந்தவர்’
  ‘அவருடைய நயமான பேச்சிலேயே எங்களையெல்லாம் மயக்கிவிட்டார்!’

நயம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நயம்1நயம்2

நயம்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (பொருளின்) விலைக் குறைவு; மலிவு.

  ‘கத்தரிக்காய்தான் நயமாகக் கிடைக்கிறது’
  ‘கடைத் தெருவுக்குச் சென்றால்தான் எதையும் நயமாக வாங்க முடியும்’
  ‘எங்கள் கடையில் நயமான விலையில் எல்லாப் பொருள்களும் கிடைக்கும்’