தமிழ் நாக்கில் சனி யின் அர்த்தம்

நாக்கில் சனி

பெயர்ச்சொல்

  • 1

    சொன்ன மாத்திரத்திலேயே தீங்கு விளைவிக்கும் தன்மை உடையதாகக் கருதப்படும் பேச்சு.

    ‘அவளுக்கு நாக்கில் சனி; எதற்கெடுத்தாலும் அபசகுனமாகத்தான் பேசுவாள்’
    ‘எனக்கு நாக்கில் சனி என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் நானாகப் போய் வாயைக்கொடுத்து அவரிடம் வாங்கிக்கட்டிக்கொள்வேனா?’