தமிழ் நாக்கு வழி யின் அர்த்தம்

நாக்கு வழி

வினைச்சொல்வழிக்க, வழித்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு ‘இருக்கிற அல்லது கிடைக்கிற ஒன்றை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது’ என்ற பொருளில் எரிச்சல் தொனியில் பயன்படுத்தப்படும் சொல்.

  ‘பணம் இல்லாமல் வெறும் புகழை மட்டும் வைத்துக்கொண்டு நாக்குவழிக்கவா முடியும்?’
  ‘நீ தரும் இரண்டாயிரத்தை வைத்துக்கொண்டு நாக்கு வழிக்கவா முடியும்?’

தமிழ் நாக்கு வழி யின் அர்த்தம்

நாக்கு வழி

வினைச்சொல்வழிக்க, வழித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரை) இழிவாக விமர்சித்தல்.

  ‘மற்றவர்களை நாக்கு வழிப்பதே அவருக்கு வழமையாகிவிட்டது’