தமிழ் நாகரிகம் யின் அர்த்தம்

நாகரிகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் வாழும் மக்களின் சமூக வாழ்க்கை முறை; பண்பாடு.

  ‘சிந்து சமவெளி நாகரிகம்’
  ‘ஐரோப்பிய நாகரிகம்’
  ‘இந்திய நாகரிகம்’
  ‘நகர்ப்புற நாகரிகத்தின் வளர்ச்சி’

 • 2

  பண்பாகப் பேசுதல் அல்லது நடந்துகொள்ளுதல் குறித்து ஏற்பட்டிருக்கும் நியதி.

  ‘கதவைத் தட்டிவிட்டுத்தான் உள்ளே வர வேண்டும் என்ற நாகரிகம்கூட இவனுக்குத் தெரியாதா?’

 • 3

  (நடை, உடை, பாவனை, உணவு போன்றவற்றில்) நவீன காலத்துப் பழக்கவழக்கங்களுக்குப் பொருந்திவரும் தன்மை.

  ‘நாகரிகமான உடைகள்’
  ‘கல்யாணங்களில்கூட மேசைகளில் உணவு பரிமாறப்படுவதுதான் இன்றைய நாகரிகம்’
  ‘பீட்சா நாகரிகம் வந்த பிறகு எல்லோருக்கும் சீடையும் முறுக்கும் மறந்துபோய்விட்டதா?’