தமிழ் நாடகம் யின் அர்த்தம்

நாடகம்

பெயர்ச்சொல்

 • 1

  மேடையில் பார்வையாளர்களின் முன்னால் உடல் அசைவு, வசனம், ஒப்பனை போன்றவற்றின் மூலமாகவும் வானொலியில் குரல் மூலமாகவும் ஒரு கதையை, ஒரு நிகழ்ச்சியை நடிப்பின் மூலம் காட்டும் கலை வடிவம்.

  ‘அந்தக் காலத்தில் குரல்வளம் உடையவர்களே நாடக நடிகராக முடிந்தது’
  ‘பிரபலமான நாடகங்களில் சில திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளன’
  ‘வானொலி நாடகத்தில் பங்குபெறக் குரல்வளம் மிக்க நடிகர்கள் தேவை’

 • 2

  மேற்குறிப்பிட்ட வகையில் நிகழ்த்துவதற்கு ஏற்றதாகப் படைக்கப்படும் இலக்கிய வடிவம்.

  ‘தற்காலத் தமிழ் நாடகம் என்பது 1960களின் இறுதியில்தான் எழுதப்பட்டது’
  ‘நாடக இலக்கியம்’
  ‘இதிகாச நாடகம்’
  ‘துன்பியல் நாடகம்’
  ‘இன்பியல் நாடகம்’

 • 3

  உண்மையாக இல்லாமல் போலியாக நிகழ்த்தப்படுவது; பாவனை; நடிப்பு.

  ‘‘அவன் மன்னிப்புக் கேட்பதெல்லாம் வெறும் நாடகம், நம்பாதே’ என்று எச்சரித்தார்’
  ‘அமைச்சரின் ராஜினாமா நாடகம் நேற்று மாலை முடிவுக்கு வந்தது’