தமிழ் நாடகமாடு யின் அர்த்தம்

நாடகமாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

  • 1

    (பிறரை நம்பச் செய்யும் பொருட்டு) நடித்தல்.

    ‘செய்வதையும் செய்துவிட்டு ஒன்றும் தெரியாது என்று நாடகமாடுகிறான்’
    ‘தொழிற்சாலைக்கு இடம் வாங்கித் தருவதாக நாடகமாடி அவர் சுமார் முப்பது இலட்ச ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்’
    ‘அவன் செய்தது முற்றிலும் தவறு என்பதைப் புரியவைக்க அவனது பெற்றோர் நாடகமாடி அவனைத் திருத்துவதே கதை’