தமிழ் நாட்டு யின் அர்த்தம்

நாட்டு

வினைச்சொல்நாட்ட, நாட்டி

 • 1

  நடுதல்.

  ‘இமயமலைச் சிகரத்தில் இந்தியக் கொடியை நாட்டிய முதல் வீரர் டென்சிங் ஆவார்’
  உரு வழக்கு ‘திரைப்பட உலகில் வெற்றிக் கொடியை நாட்டியவர்’

தமிழ் நாட்டு யின் அர்த்தம்

நாட்டு

பெயரடை

 • 1

  (தாவரம், விலங்கு குறித்து வரும்போது) கலப்பு இனமாகவோ உயர் விளைச்சல் ரகமாகவோ இல்லாத.

  ‘நாட்டுப் பசு’
  ‘நாட்டு நாய்’
  ‘நாட்டுப் பழம்’

 • 2

  நவீனத் தொழில்நுட்பத்தின் மூலமாக இல்லாமல் உள்ளூரிலேயே கிடைக்கும் கைத்தொழில்மூலம் தயாரிக்கப்பட்ட.

  ‘நாட்டு வெடிகுண்டு’
  ‘நாட்டுத் துப்பாக்கி’
  ‘நாட்டுச் சாராயம்’